காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் - காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு.!
love couples sucide in karanataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் டேகல் புரசபை செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரும் பனமாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுவேதா என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
இதற்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சதீஷ், சுவேதா இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று மதியம் பேடராயனஹள்ளி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்திற்கு வந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவை நோக்கி வந்த பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக என்ஜின் ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த தற்கொலை குறித்து பங்காருபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
love couples sucide in karanataga