அரசுப் பள்ளிகள் மூடப்படுகிறது...ஆனால் கல்விச் சாதனை விழா என்று விளம்பரமா...? - சீமான் விமர்சனம்
Government schools being closed but advertisement educational achievement festival Seeman review
சென்னை வளசரவாக்கத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 'சீமான்', அரசை சுட்டிக்காட்டி கடும் விமர்சனம் செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,"சென்னையில் நேற்று நடத்தப்பட்ட கல்விச் சாதனை விழா உண்மையில் கல்வி விழாவா தெரியவில்லை; அது சினிமா பாடல் வெளியீட்டு விழாவைப் போலவே இருந்தது.

கல்வியில் புகழ் பெற்ற அறிஞர்கள் எத்தனை பேர் அங்கு கலந்து கொண்டார்கள்?” என கேள்வி எழுப்பினார்.மேலும்,"ஒருபுறம் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை மூடிவிட்டு, மறுபுறம் ‘தமிழ்நாடு கல்வியில் சிறந்தது’ என்று விழா நடத்துகிறீர்கள்.
இது திராவிட மாடல் அரசு அல்ல; விளம்பர மாடல் அரசு தான்.அதுமட்டுமின்றி,பட்டப்படிப்பை முடித்து வெளியில் வரும் மாணவர்கள் கூட தாய்மொழியில் எழுதத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் தமிழ்நாட்டில் தமிழ் தேர்வு எழுத 60,000 பேர் கூட வராதது மிகப்பெரிய அவலநிலை” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
English Summary
Government schools being closed but advertisement educational achievement festival Seeman review