பீகாரில் சூடுபிடிக்கும் தேர்தல்! பெண்களை கவரும் ரூ.7,500 கோடி திட்டம் தொடங்கி வைத்த பிரதமர்...! - Seithipunal
Seithipunal


பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் ஜே.டி.யு கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி தலைமையிலான இந்தியா கூட்டணியும் வாக்காளர்களை கவரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் “மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.

இந்த தொகையை சுயதொழில் தொடங்கவும், அல்லது பிற வாழ்வாதார தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும், தொழில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி, சந்தை வழிகாட்டுதல், அடுத்த கட்டத்தில் ரூ.2 லட்சம் வரை மானிய உதவியும் வழங்கப்படும்.

ரூ.7,500 கோடி செலவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், பீகார் பெண்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elections heat up Bihar Prime Minister launches Rs 7500 crore scheme attract women


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->