விஜய் சேதுபதி பிக் அன்னவுன்ஸ்மென்ட்!!! ஞாயிற்றுக்கிழமை கிளைமாக்ஸ் தரும் டைட்டில் ரிலீஸ்...!
Vijay Sethupathis Big Announcement climax title release Sunday
கடந்த வருடம் மெகா ஹிட்டை கொடுத்த விஜய் சேதுபதி, தற்போது வரிசையாக படங்களை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் நடித்துள்ள ‘டிரெயின்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதனிடையே, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'விஜய் சேதுபதி' நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பான் இந்தியா ரேஞ்சில் உருவாகும் இந்த படத்தை சார்மி கவுர் தயாரிக்கிறார்.

மேலும், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டீசரும், தலைப்பும் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, இந்த அறிவிப்பு இயக்குநர் பூரி ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது என்பதும் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
English Summary
Vijay Sethupathis Big Announcement climax title release Sunday