அம்மாவின் தங்கம் அடமானம் வைத்து வாங்கிய கேமரா… இன்று டோலிவுட் டாப் டைரக்டராக உயர்ந்த பிரபலம்...?
camera bought by mortgaging his mothers gold Today celebrity risen become top director Tollywood
ஒருகாலத்தில் சாதாரண சிறுவனாக இருந்த அவர், இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உயர்ந்திருக்கிறார். படிப்பை முடித்த பிறகு, சினிமாவே தன் கனவு என்று உறுதி செய்து குறும்படங்கள் எடுக்க நினைத்தார்.
ஆனால், கேமரா வாங்க பணம் இல்லை.அந்த நேரத்தில், மகனின் கனவை நனவாக்க தாயார் தன்னுடைய தங்கத்தை அடமானம் வைத்து ₹44,000 கொடுத்தார். அந்த பணத்தில் கேமரா வாங்கிய அவர், ஒன்றல்ல இரண்டல்ல, 30க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கினார்.

அவை யூடியூப்பில் பிரபலமடைந்து, அவரது பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.அவரது குறும்படங்களை பார்த்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், “நீ யாருக்கும் உதவியாளராக இருக்க வேண்டியதில்லை… நீயே டைரக்ட் பண்ணு!” என்று ஊக்கமளித்தார். அந்த ஒரு வார்த்தையே அவரது வாழ்க்கையை மாற்றியது.
இன்றைக்கு, இளம் வயதிலேயே பிரபாஸ், பவன் கல்யாண் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் வேலை செய்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ‘ஓஜி’ பட இயக்குநர் சுஜீத்.
கடந்த 2014-ல் ‘ரன் ராஜா ரன்’ மூலம் ஹிட் டெப்யூ, அதன்பின் ‘சாஹோ’ மூலம் இந்தியா முழுவதும் பெயர், இப்போது ‘ஓஜி’ மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார். சினிமாவை உயிரோடு நேசித்த சிறுவன், இன்று டோலிவுட் இயக்குநர்களின் முதல்தர வரிசையில் இருப்பது பெருமைக்குரியது.
English Summary
camera bought by mortgaging his mothers gold Today celebrity risen become top director Tollywood