ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு முற்றுப்புள்ளி...! இஸ்ரேலை கட்டுப்படுத்தும் டிரம்ப்...!
End occupation plan Trump control Israel
பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்கு கரை என 2 பகுதிகளாக பிரிந்துள்ளது. ஆனால் மேற்கு கரையின் முக்கிய பகுதிகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கட்டுப்பாட்டில் உள்ளன என்பது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு.
இதில் பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இஸ்ரேல் அங்கு குடியிருப்புகளை அமைக்கும் நடவடிக்கையை நிறுத்தாமல் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.
இதில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்.
இந்த நடவடிக்கையை இனி தொடர முடியாது. இதுவரை நடந்தவை போதும். இனி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
English Summary
End occupation plan Trump control Israel