2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி - எப்போது தெரியுமா?
vice president c p radhakrishnan come in taminadu
நாட்டின் துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தருகிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
இதனை முன்னிட்டு அவர் வருகிற 4-ந்தேதி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கு அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழகம் வரும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் தனது வீட்டுக்கும் செல்லும், அவர் அன்று முழுவதும் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் சந்திக்கிறார்.
அன்று இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதியின் இந்த வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.
English Summary
vice president c p radhakrishnan come in taminadu