கொட்டித் தீர்க்க போகும் கனமழை...! உஷாராக இருக்க வேண்டிய மாவட்டங்கள் என்னென்ன...?
Heavy rains about pour Which districts should be alert
சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மை அறிக்கையில், தமிழகத்தில் இன்று மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையுள்ளது.
அதிலும் குறிப்பாக, பலத்த தரைக்காற்று மணிக்கு 30 -40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.அதுமட்டுமின்றி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளையும் (28–ஆம் தேதி முதல் அக்டோபர் 2–ஆம் தேதி வரை) இதே போல் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் நிலை தொடரும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம்.சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36° செல்சியஸ் வரை, குறைந்தபட்ச வெப்பநிலை 26 -27° செல்சியஸ் வரை இருக்கலாம்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று முதல் 30 -ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 -50 கிமீ வேகத்தில், இடையிடையே 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy rains about pour Which districts should be alert