இப்படி ஒரு முறை சப்பாத்தி குருமா வைத்து சாப்பிட்டு பாருங்க - 2 சப்பாத்தி சேர்த்து சாப்பிடுவீங்க.!!
how to make chapati kuruma
தேவையான பொருட்கள்:-
கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், தக்காளி, தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, பட்டை, லவங்கம், கசகசா, புதினா இலை, எண்ணெய், உப்பு, கறி மசாலா தூள், கறிவேப்பிலை, முந்திரி, பச்சை மிளகாய்.
செய்முறை:-
"முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, சோம்பு, இலவங்கம், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், கசகசா, மஞ்சள் தூள், கறி மசாலாத்தூள் முந்திரி, புதினா இலை, சேர்த்து விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
இதனை வேக வைத்திருக்கும் குருமாவில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் சப்பாத்தி குருமா தயார்.
English Summary
how to make chapati kuruma