தட்டாஞ்சாவடி தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்ற வியூகம்..பொறுப்பாளர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தட்டாஞ்சாவடி தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்ற வியூகம் வகுத்து , இளைஞரணி  நித்திஷ் பொறுப்பாளராக நியமித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிமுகம் செய்து வைத்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதி திமுக செயல்வீரர்கள்  திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தட்டாஞ்சாவடி தொகுதி அவைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். 

இதில் திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா  கலந்து கொண்டு, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றி கழகத் தலைவர் தளபதியார் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்காக கழகத்தினரை ஒருங்கிணைப்பது, இல்லந்தோறும் உறுப்பினர் சேர்ப்பது, தமிழக திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறிப்பாக மகளிர் நலத்திட்டங்கள் மக்களிடத்தில் எடுத்துரைத்து, அத்திட்டங்கள் புதுச்சேரியில் தொடர திமுக–வுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்திஷ் அவர்களை தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கிறேன் என்று கூறி அவரை அறிமுகம் செய்து வைத்தார். அவருடன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றி தட்டாஞ்சாவடி தொகுதியை மீண்டும் திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The strategy for DMK to regain the Thattanchavadi constituency Do you know who the in-charge is?


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->