'தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டுகள் மீது மட்டுமே குறியாக உள்ளது': பிரியங்கா காந்தி குற்றசாட்டு..!
Priyanka Gandhi accuses NDA of only focusing on votes
பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதன்படி, பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது, 'பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டுகள் மீது மட்டுமே குறியாகவுள்ளது. அக்கூட்டணிக்கு பீஹார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அங்கு மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நெருங்குவதால், முதல்வர் மகிளா ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது மாதந்தோறும் அளிக்கப்படும் என அவர்கள் உறுதி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளும் திறன் பெண்களுக்கு உள்ளது என்றும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரின் நோக்கங்களை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மேலும், உங்களின் ஓட்டுகளை மனதில் வைத்து மட்டுமே இந்த நிதியுதவியை அவர்கள் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும். உங்களுக்கான மரியாதையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களால் உங்களின் பாதுகாப்பை தர முடியாது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காங்கிரஸ், பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்கும் என்றும், நிலம் இல்லாத விவசாய குடும்பத்துக்கு நிலம் வழங்குவதுடன் அதனை பெண்கள் பெயரில் பதிவு செய்வோம் என்று பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
English Summary
Priyanka Gandhi accuses NDA of only focusing on votes