தவெக கொடி விவகாரம்: விஜய்க்கு  ஐகோர்ட்டு புதிய உத்தரவு! - Seithipunal
Seithipunal


தவெக கொடி விவகாரம் தொடர்பாக  மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியினை கடந்த ஆண்டு தொடங்கினார். இதன்பின்னர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27 அக்டோபரில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்கள் குறித்து விளக்கினார். மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க கொள்கை எதிரி எனவும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க. அரசியல் எதிரி எனவும் காட்டமாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கடந்த மாதம் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க, தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை நேரடியாக விஜய் விமர்சித்தார். குறிப்பாக தி.மு.க தலைவரும் முதல்-அமைச்சருமான ஸ்டாலினை விஜய் கடுமையாக சாடியிருந்தார். 

இதையடுத்து  எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து, 'உங்கள் விஜய் நான் வரேன்' எனக் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் விஜய். 
இந்தநிலையில் , தவெக கொடி விவகாரம் தொடர்பாக  மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வில் பச்சையப்பன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thaveka flag issue New order from High Court for Vijay


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->