குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Waste must be segregated before collection District Collectors order
மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
திடக்கழிவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளை கொண்டு செல்வது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில்
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றதும். உழவர்கரை நகராட்சி ஆணையர், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் குப்பைகளை சேகரிக்கும் நிறுவனத்தின் நிர்வாம ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் அதில் மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும் எனவும் மேலும் குப்பைகளை வண்டியில் கொண்டு செல்லும் போது சாலைகளில் சிதறாமலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் மேலும் குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் குப்பைகளை பிரித்து எடுத்து செல்லும் பொழுது அவர்கள் ஓட்டுநருக்கு அருகில் அமரவைக்க வேண்டும் எனவும் கூறிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் இப்பணியில் ஈடுபடும் துப்புரவு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து அவர்கள் உடல்நிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர்களுக்கு தேவையான தடுப்பூசி மேலும் காலணிகள், பூட்ஸ் மற்றும் சீருடைகள் ஐ டி கார்டு கையுறைகள் முகக் கவசங்கள் போன்றவை எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும் இவைகளை அணிந்து கொண்டு குப்பைகளை வார அனுமதிக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு சுகாதாரமான முறையில் குப்பைகளை கையாள்வது தொடர்பாக மாதம் ஒரு முறை பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு மாத ஊதியம் முழுமையாக வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு ESI உள்ளிட்ட பிடித்தம் முறையாக கட்டப்பட்ட வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கேட்டுக்கொண்டார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் குப்பைகள் அல்லும் வாகனத்தில் குப்பையின் அருகில் ஊழியர்களை கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்றும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலே அவர்களை அமரவைத்து அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்கள். மேலும் மழைக்காலம் நெருங்குவதற்குள் சிறு சிறு வாய்க்கால்களில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த ஆணையர்களை ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மேலும் ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
English Summary
Waste must be segregated before collection District Collectors order