மாதரசி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
madharasi movie ott release update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மதராஸி. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் ரிலீஸான இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
English Summary
madharasi movie ott release update