பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர நேரம் இல்லையா..? டெல்லி நீதிமன்றம் கேள்வி..!
Delhi court asks if its time to move towards common civil code
பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர இது நேரமில்லையா என டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனிப்பட்ட மற்றும் வழக்கமான சட்டம் தேசிய சட்டத்தை மீறாத ஒற்றை கட்டமைப்பு உருவாவதை பொது சிவில் சட்டம் உறுதி செய்யும் என்று நீதிமன்றம் எனக்கூறியுள்ளது.
போக்சோ சட்டத்தில் கைதான ஹமித் ரசா என்பவரின் ஜாமின் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி அருண் மோங்கா, பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர இது சரியான நேரம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், மத சுதந்திரம் பறிபோகும் என்று எச்சரிப்பது உண்மைதான் என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தனிநபர்களை குற்றவாளியாக்கும் நடைமுறைகளுக்கு மேலே குறிப்பிட்ட சுதந்திரம் பொருந்தாது என்றும், தனிப்பட்ட மற்றும் வழக்கமான சட்டம் தேசிய சட்டத்தை மீறாத ஒற்றை கட்டமைப்பு உருவாவதை பொது சிவில் சட்டம் உறுதி செய்யும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Delhi court asks if its time to move towards common civil code