வாலிபர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. பதறிய டாக்டர்கள்!
There were 29 spoons and 19 brushes in the stomach. Panicked doctors
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள் இருந்த அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் நஅங்குள்ள ஹபூர் மாவட்டத்தின் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின். போதை பொருளுக்கு அடிமையான இவர் அங்குள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு கடுமையான வயிற்றி வலி ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் ஸ்கேன் செய்ததில் 2 பேனா, 19 பிரஷ்கள், 29 கரண்டிகள் இருப்பதைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினர்.
மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை என்று கூறி கோபத்தில் இந்த பொருட்களை விழுங்கினேன் என சச்சின் அதிர்ச்சியாக கூறியதாக கூறப்படுகிறது. மேலும் நாள் முழுவதும், தங்களுக்கு மிகக் குறைவான காய்கறிகளும், ஒரு சில சப்பாத்திகளும் மட்டுமே வழங்கப்படும் என்றும், வீட்டிலிருந்து ஏதாவது வந்தால், பெரும்பாலானவை தங்களுக்கு கொடுக்கப்படாது என்றும், சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு பிஸ்கட் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There were 29 spoons and 19 brushes in the stomach. Panicked doctors