சுவையான சாமை ஊத்தாப்பம்.!
how to make samai oothappam
தேவையானவை:-
சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து, எண்ணெய், உப்பு, வெங்காயம், கேரட், தக்காளி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், முந்திரி, கடலைப்பருப்பு..
செய்முறை
முதலில் சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
மறுநாள் காலையில் தோசை செய்வதற்கு முன்பு பெரிய வெங்காயம் கேரட் தக்காளி கொத்தமல்லித்தழை பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி முந்திரியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஊற வைத்த கடலைப்பருப்பை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இதை அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் விட்டு தயார் செய்துள்ள மாவை தடிமனாக ஊற்றி கலந்து வைத்துள்ள பொருட்களை மேலாக தூவி இருக்கிறவும் வேகவிட்டு எடுத்தால் சுவையான சாமை ஊத்தாப்பம் தயார்.
English Summary
how to make samai oothappam