தேவையான பொருட்கள்:-
வரகரிசி, கொள்ளு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம், ஓமம், தேங்காய், எண்ணெய், துருவிய கேரட், உப்பு.
செய்முறை:-
வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் துவரம்பருப்பு, கடலை பருப்பு, ஓமம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.
இதனை கொரகொரப்பாக அரைத்து இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து கேரட் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு தயார் செய்து வைத்துள்ள மாவை அடைகளாக சுட்டு எடுத்தால் வரகரிசி கொள்ளு அடை தயார்.