17 வயது மாணவரின் மரணத்திற்கு பொறுப்பான காவலர்கள்...! 11 ஆண்டு சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


2019-ஆம் ஆண்டு, மதுரையின் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக் (வயது 17) குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு நடந்த விசாரணை பயங்கரமாக மாறியது. அப்போது காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலால் தீவிரமாக காயமடைந்த முத்து கார்த்திக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உயிருக்கு போராடி முடியாமல் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, தன் மகனின் மரணத்திற்கு காரணமான காவலர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயா மதுரை நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணையில், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜோசப் ஜாய், குற்றம் நிரூபிக்கப்பட்ட நால்வருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமின்றி,சாட்சிகளை மிரட்டி அழிக்க முயன்ற காவலர்களுக்கு துறைத்தரமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையின் போது மாணவனின் உடலில் இருந்த காயங்களை மறைத்த அரசு மருத்துவர்களுக்கு எதிராகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police officers responsible death 17 year old student Sentenced 11 years prison


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->