கோழி வேட்டை…அண்டை வீட்டில் இருந்தவரின் உயிரைக் காவு வாங்கியது...! நடந்தது என்ன...?
Chicken hunting took neighbor life What happened
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மேல்மதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இன்று காலை, தனது மருமகனுக்காக கோழி அடித்து குழம்பு சமைக்க முடிவு செய்த அவர், வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கொண்டு வேட்டைக்குச் சென்றார்.

அங்கு வீட்டின் அருகே சுற்றித் திரிந்த கோழியை குறிவைத்து அண்ணாமலை சுட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக குறி தவறி, அண்டை வீட்டில் ஓய்வெடுத்து படுத்திருந்த இளைஞர் பிரகாஷின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து விட்டது.
கண நொடி நேரத்தில் இரத்த வெள்ளத்தில் சிக்கிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், அண்ணாமலையை கைது செய்த காவலர்கள் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Chicken hunting took neighbor life What happened