டிஜிசிஏ உத்தரவின் படி ஆய்வுககளை நிறைவு செய்துள்ள ஏர் இந்தியா: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை என அறிக்கை..! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டை உலுக்கியது. அதனை தொடர்ந்து, ஏர் இந்தியா மற்றும் ஏனைய விமானங்களில் கோளாறு காரணமாக விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் எரிபொருள் சுவிட்ச்கள் காரணமாக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, விமான போக்குவரத்துக்கு இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவின் பேரில் விமானங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து போயிங் விமானங்களிலும் ஜூலை மாத இறுதிக்குள் இந்த ஆய்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆய்வுகளை மேற்கொண்ட ஏர் இந்தியா, போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் முன்னெச்சரிக்கை சோதனைகளை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளது. 

மேலும், ஏர் இந்தியா தனது விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் போயிங் 787 மற்றும் 737 விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் எந்தப் பிரச்சனையும் காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆய்வுகளில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆய்வுகள், டிஜிசிஏ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டதாகவும், இது குறித்து டிஜிசிஏவிடம் தெரிவித்துள்ளதாகவும் ஏர் இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air India reports no issues with Boeing aircraft fuel switch systems


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->