டிடிவி தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி பழனிசாமி – அமமுகவுக்கு க்ரீன் சிக்னல்!எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Edappadi Palaniswami joins hands with TTV Dhinakaran Green signal for AMMK Edappadi Palaniswami interview creates a stir in political circles
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக ஆட்சியை வீழ்த்தும் நோக்கத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் இணைந்திருப்பது சர்ச்சையாக இருந்தாலும், அதற்கு விளக்கம் அளிக்கவும், புதிய கூட்டணிப் பங்காளிகளை சேர்க்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் இபிஎஸ் வழங்கிய தனியார் தொலைக்காட்சி பேட்டி அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. அந்த பேட்டியில், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, “காலம் பதில் சொல்லும்” என இருமுறையும் சிரித்தபடி பதிலளித்தார்.
இந்த பதில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக மீதான அவரது நிலைப்பாடு மாறி வருகிறது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அமமுக ஆதரவு உள்ள பகுதிகளில் அதிமுக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதால், அந்த கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதே பேட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி, “ஓபிஎஸ் விவகாரம் காலம் கடந்துவிட்டது.” என தெளிவாக மறுப்பு தெரிவித்தார். மேலும், “எங்கள் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி, எங்களை எதிர்த்து நடக்கும் ஒருவரை எப்படிச் சேர்க்க முடியும்?” என்றும் அவர் கேட்டிருந்தார்.
OPS மற்றும் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் மீண்டும் இணைவது குறித்து கட்சியினுள் சில ஆதரவுகள் இருந்தாலும், இதுவரை எடப்பாடி பழனிசாமி அதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். எனினும் தற்போது டிடிவி தினகரன் விஷயத்தில் அவர் நேரடியாக மறுக்காமல் பதில் அளித்திருப்பது புதிய கூட்டணி சாத்தியங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியை சந்திக்க தயாராக உள்ளதாகவும், திமுகவிற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு விடுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் திமுகவின் எதிரணிக்கான பரப்பளவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பரவி வருகின்றது. OPS-க்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும், அமமுகக்கு வாய்ப்பு இருக்கக்கூடும் எனும் சிறிய சமிக்ஞைகள், 2026 தேர்தல் களத்தை உற்சாகமாக மாற்றி இருக்கின்றன.
English Summary
Edappadi Palaniswami joins hands with TTV Dhinakaran Green signal for AMMK Edappadi Palaniswami interview creates a stir in political circles