3-ம் நாளாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடும் அமளில் ஈடுபட்டு வரும் எதிர்கட்சிகள்...! காரணம் என்ன?
Opposition parties engaging heavy disruption during parliamentary session What reason
கடந்த ஜூலை 21 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது.இந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கின.இதற்கிடையே, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தாமாக முன்வந்து பதவி விலகியது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 3 ஆம் நாளாக இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. இதில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளன.
English Summary
Opposition parties engaging heavy disruption during parliamentary session What reason