இரும்புச்சத்து அதிகளவு உள்ள புடலங்காய் தயிர் பச்சடி...! செய்யலாமா...?
Can I make a snake gourd yogurt tart with high iron content
புடலங்காய் தயிர் பச்சடி
புடலங்காயில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது என்பதால் இதை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் சூட்டை தணித்து, வாத பிரச்சினைகளை சரி செய்யவும், உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரை வெளியேற்றவும், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும் ஒரு அருமருந்தாக திகழ்வதுதான் புடலங்காய்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 3
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் – 1/4 கப்,
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 4
தயிர் – ஒரு கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு அதற்கு நடுவே இருக்கக்கூடிய விதைப்பகுதியையும் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒன்றை கப் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதில் புடலங்காய்க்கு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் நன்றாக வேக விடுங்கள்.
10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.தயிர்புடலங்காய் தயிர் பச்சடி.அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் இந்த தேங்காய்க்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தயிரை ஊற்றி நன்றாக பீட் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தயிர் மிகவும் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் சிறிது தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இவை இரண்டும் நன்றாக கலந்த பிறகு நாம் வேக வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து கலந்து விட வேண்டும்.தயிர் அடுத்ததாக ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய் இவற்றை போட்டு நன்றாக பொரிய விடுங்கள்.
இவை அனைத்தும் பொரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி இதில் பெருங்காயத் தூளையும் கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு தயார் செய்து வைத்திருக்கும் புடலங்காயில் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தலையை மேலாக தூவி விட்டால் புடலங்காய் தயிர் பச்சடி தயாராகிவிடும்.
English Summary
Can I make a snake gourd yogurt tart with high iron content