பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தேர்தலை புறக்கணிப்பது குறித்து ஆலோசனை: தேஜஸ்வி..! - Seithipunal
Seithipunal


பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. அதன்படி, பீஹாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

இதற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளிதுமளியால் பாராளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சி தலைவருமான தேஜஸ்வி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, போலி வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜ., விரும்பினால், அவர்களுக்கு பதவி நீட்டிப்பை வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒட்டுமொத்த நடவடிக்கையும் நேர்மையற்ற முறையில் இருக்கும் போது தேர்தலை நடத்துவதில் என்ன பயன்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தேர்தலை புறக்கணிப்பது என்பது ஒரு வாய்ப்பு என்றும் இது குறித்து யோசிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதில் இறுதி முடிவு எடுக்கும் முன்னர் பொது மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் கருத்து கேட்கப்படும் என்றும் தேஜஸ்வி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tejashwi says there will be discussions about boycotting the elections following the special revision of the voter list in Bihar


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->