'ஆசியாவில் முதல் நடுநிலை கட்சி மநீம தான்:' தேர்தல்களில் நாங்கள் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்': சொல்கிறார் கமல்ஹாசன்..!
Kamal Haasan says we did not lose in the elections
2026 ஆம் ஆண்டு தமிழாகி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில நிர்வாகிகள் மவுரியா, தங்வேலு, அருணாச்சலம், ஊடக பிரிவு செயலர் முரளி அப்பாஸ், சென்னை மண்டல செயலர் மயில்வாகனன், மாவட்ட செயலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது, 'தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கமலிடம் லியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, அக்கூட்டத்தில் கமல் பேசிய கமல் கூறியதாவது: நான் வீரத்திற்கு நெஞ்சை காட்டுவேன்; துரோகத்திற்கு முதுகை கூட காட்ட மாட்டேன். நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எனக்கு வயதாகி விட்டதால், கட்சி தொடங்கியதாக சிலர் கூறினர். எனக்கடுத்து கட்சியினர் தான் பிள்ளைகளாக இருக்கின்றனர். தமிழக நலனுக்காகத்தான் கட்சியை தொடங்கின என்று பேசியுள்ளார்.மேலும், பூத் கமிட்டிகளை சரியாக அமைக்க வேண்டும். இதற்கு முன் இருந்தவர்கள் ஏமாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் முதல் நடுநிலை கட்சி ம.நீ.ம., தான் இதை நான் பிரதமர் மோடியிடம் சொன்னேன் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஒரே நாடு தான். இதை இடது, வலது என பிரித்து சொல்லக்கூடாது எனவும், எனக்கு பின்னாலும் கட்சி இருக்க வேண்டும். அதனால் தான் தலைவர்களை நான் உருவாக்குகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'வாழும் காமராஜர், வாழும் காந்தி' என்ற பெயர் தனக்கு வேண்டாம் என்றும், கமல் என்ற பெயரே தனக்கு போதும் என தெரிவித்துள்ளார்.
ஜாதி தனக்கு இடையூறாக இருக்கிறதாவும், ஜாதி இருக்கிறதா, இல்லையா என்று தனக்கு தெரியவில்லை. உங்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கு, 5,000, 10,000 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு விடாதீர்கள் என்றும் ஓட்டு போடாமல் வீட்டில் இருப்பது தேசத் துரோகம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், திராவிடம் நாடு தழுவியது. இங்கு இரண்டு கட்சிக்குள் அடங்கி விடுவது இல்லை என்றும், தேசியமும் இருக்க வேண்டும்; தேசமும் இருக்க வேண்டும் எனவும் தமிழர்களுக்கென தனித்தன்மையும் இருக்க வேண்டு என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசியுள்ளார்.
English Summary
Kamal Haasan says we did not lose in the elections