மஹாராஷ்டிராவில் 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை; தேர்தல் மூத்த அதிகாரி..!
No one objects to the inclusion of 15 lakh new voters in Maharashtra
மஹாராஷ்டிராவில் கடந்த 2024 நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு மாநிலத்தில் 14.71 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4.09 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஆனால், அங்கு கட்சிகளிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த மூத்த தேர்தல் அதிகாரி கூறியதாவது:
மாவட்ட வாரியான தரவுகளின்படி, தானேயில் 02.25 லட்சம் புதிய வாக்காளர்களுடன் அதிகபட்ச அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்றும், அதைத் தொடர்ந்து புனேவில் 01.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இதன் மூலம் தானேயில் 74.55 லட்சமாகவும், புனேவில் 90.32 லட்சமாகவும் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

அத்துடன், மும்பை புறநகர் மாவட்டத்தில் 95,630 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் அதன் எண்ணிக்கை 77.81 லட்சமாகவும், மும்பை நகரம் 18,741 பெயர்களைச் சேர்த்து அதன் வாக்காளர் எண்ணிக்கை 25.62 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஒரு அரசியல் கட்சி கூட இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என அந்த மூத்த தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
No one objects to the inclusion of 15 lakh new voters in Maharashtra