திராவிட முன்னேற்ற கழகம் அரசு மீது குற்றச்சாட்டு..கடைசி பட்ஜெட்டிலும் ஏமாற்றமே...! - கே. அண்ணாமலை கடும் சாடல் - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படாமல் போன நிலையில், கடைசி இடைக்கால பட்ஜெட்டிலும் உண்மை நிலையை மறைத்து வெறும் வார்த்தை அலங்காரங்களால் மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்யப்பட்டுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.

தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம ஊதியம் கோரும் ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், அவர்களின் நலனுக்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படாமல் அரசு வெறும் அறிவிப்புகளிலேயே காலத்தை கழித்ததாகவும் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் இன்றி மரத்தடியில் படிக்கும் மாணவர்கள், பராமரிப்பு இல்லாத விடுதிகள், கல்வி வளாகங்களில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாதிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசு அக்கறை காட்டவில்லை என்றும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சாதனைகள் என்ற பெயரில் புகழ் பட்டியலையே வாசித்ததாகவும் சாடினார்.மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்தக் கடன் 2027 மார்ச் மாதத்திற்குள் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும் நிலையில், இத்தனை பெரிய தொகை எதற்காக கடனாக பெறப்பட்டது, அந்த நிதி எங்கு செலவானது என்பதை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வாக்குறுதிகள் நிறைவேறவில்லை, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை, பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட தீர்வு இல்லை என்றார்.கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ திட்டம் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டு, பின்னர் மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவது பொறுப்பற்ற செயலாகும் என்றும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாதது அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

பட்ஜெட் உரையை அவசரமாக வாசித்த விதமே ஆட்சியின் முடிவைக் காட்டுவதாக இருந்தது என்றும், இனி எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை உருவாகும் என்ற உணர்வே அதில் பிரதிபலித்ததாகவும் விமர்சித்தார்.

மேலும், மு. கருணாநிதி காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘கூவம், அடையாறு சுத்திகரிப்பு’ என அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் நிலை குறித்து எந்தத் தெளிவும் இல்லாதது வருத்தமளிப்பதாகவும், மக்களின் பணம் எங்கு சென்றது என்பதை அரசு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dravida Munnetra Kazhagam accuses government disappointment last budget Annamalai strongly criticizes


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->