முதல்வர் விஜய்யை நீலாங்கரையில் இல்லத்தில் சந்தித்த துரை வைகோ; தமிழக அரசியலில் சலசலப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்தில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை, திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிப்பது உட்பட திருச்சி மாவட்டம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

விஜய் முதல்வரான பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன்பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், துரை வைகோ விஜய் குறித்து பாசிட்டிவாக பேசி வருவதோடு, தவெகவும் ஒரு திராவிட இயக்கம் தான் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதல்வர் விஜய் திருச்சி சென்ற போது அவரை வரவேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது ''மதிமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டம், இனி எப்போது அடுத்த கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மதிமுகவும், தவெக பக்கம் சாயும் என தமிழக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படும் நிலையில், துரை வைகோ முதல்வர் விஜய்யை சந்தித்துள்ளது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Durai Vaiko Meets Chief Minister Vijay at His Neelankarai Residence


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->