ஜூன் 08 இல் இந்தியா, வங்கதேசம் இடையே 'எல்லை காவல் மாநாடு': ஊடுருவல்காரர்கள், எல்லை உள்கட்டமைப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை..! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வங்காளதேசத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சியால் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். 

இந்நிலையில், அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முடிந்த  தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிரதமர் தாரீக் ரகுமான் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது.

பிரதமர் ரகுமான் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர் முதன்முறையாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே 'எல்லை காவல் மாநாடு' வரும் 08-ஆம் தேதி நடை பெறவுள்ளது. இதற்காக வங்காளதேச இயக்குநர் ஜெனரல், மேஜர் ஜெனரல் முகமது அஷ்ராபுஜாமன் சித்திக் தலைமையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு இந்தியாவுக்கு வருகை தரவுள்ளது.

 புதுடெல்லியில் வரும்  குறித்த குழு 08-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை என 04 நாட்களுக்கு, இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்காளதேச எல்லை காவல் படை அதிகாரிகள் இணைந்து இந்த மாநாட்டில் பங்குப் பெறவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது முக்கியமாக வங்கதேசத்தில் இருந்து எல்லை வழியாக அத்துமீறி இந்தியாவுக்குள் நுழையும் ஊடுருவல்காரர்களை பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேச குற்றவாளிகளை தடுப்பது, வேலி அமைப்பது, இந்திய ஊருடுவல் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை, எல்லை உள்கட்டமைப்பு தொடர்பான விவகாரங்கள், நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பிற விசயங்கள் பற்றி ஆலோசனைகள் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Border Guard Conference between India and Bangladesh on June 8


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->