தவெக கூட்டணியில் ராஜ்ய சபா வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தியை அறிவித்துள்ள காங்கிரஸ்..!
Congress announces Praveen Chakravarty as its Rajya Sabha candidate within the TVK alliance
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்தார். அதேசமயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியானது. இதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் 18-ஆம் தேடி நாட்டில் மொத்தம் காலியாகவுள்ள 24 இடங்களுக்கான மாநிலங்களவைக்கான தேர்தல்தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் தவெக தனி பெரும் கட்சியாக உள்ளது. ஆகையால், தமிழ்நாட்டில் இருந்து தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். அதேநேரம், வேறு எந்தக் கட்சியிலிருந்தாவது வேட்புமனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும்.

அவ்வாறு வேறு கட்சியில் இருந்து வேட்பு தாக்கல் செய்யாவிட்டால் தவெக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். இந்தச் சூழலில் தவெக தரப்பில் யாரை மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், தவெக தனது கூட்டணியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது.
இது குறித்து தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது;
''இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha Seat) இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தியை அறிவித்துள்ளது.
English Summary
Congress announces Praveen Chakravarty as its Rajya Sabha candidate within the TVK alliance