வரும் 26-ஆம் தேதி பயிற்சி கூட்டம்: என்.ஆர்.இளங்கோ, எம்.பி அறிக்கை..! - Seithipunal
Seithipunal


வருகிற 26-ஆம் தேதி அன்று மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கான  பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

“தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 26-07-2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கூறிய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இப் பயிற்சிக் கூட்டத்தில் வருகைப் பதிவேடு வைக்கப்பட இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NR Ilango MP reports that a training meeting will be held on the 26th


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->