செங்கல்பட்டு சிறையில் அதிர்ச்சி: கைதியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள நெல்லை குற்றவாளிகள்; போலீசார் தீவிர விசாரணை..! 
                                    
                                    
                                   Nellai criminals who attacked and threatened to kill a prisoner in Chengalpattu prison
 
                                 
                               
                                
                                      
                                            செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசிக்கிமுத்து (22), தங்கதுரை (22) கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது பயத் (22) ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக புதிய கட்டிட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி, இரவு உணவு சாப்பிடுவதற்காக 03 பேரையும் சிறை அதிகாரிகள் திறந்து விட்ட்டுள்ளனர். அப்போது குறித்த 03 பேரும் சேர்ந்து, மற்றொரு கைதியான கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் நாயக் (25) என்பவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உடனடியாக சிறைக்காவலர்கள் ஓடி வந்து ராஜேஷ் நாயக்கை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் சிறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து துணை சிறை அலுவலர் புகழரசி, கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த கைதிகள், புழல் உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டு இவ்வாறு, அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       Nellai criminals who attacked and threatened to kill a prisoner in Chengalpattu prison