41 வயது இளையவரின் காலில் விழுந்த 73 வயது எம்.எல்.ஏ! - பாஜக நிகழ்வில் வைரலான தருணம்
73 year old MLA falls feet 41 year old man moment that went viral video BJP event
பாஜக எம்.பி. மற்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியா காலில், 73 வயதான பாஜக எம்.எல்.ஏ ஒருவர் விழுந்து வணங்க முயன்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ வான தேவேந்திர குமார் ஜெயின் (73) அவர்களின் பிறந்தநாள் விழாவில், 31 வயதான மஹாரியமான் சிந்தியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் கேக் வெட்டிய மஹாரியமான், அதை தேவேந்திர குமாருக்கு ஊட்டி வாழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து நடந்த எதிர்பாராத தருணத்தில், தன்னை விட 41 வயது இளையவரான மஹாரியமானின் கால்களைத் தொட தேவேந்திர குமார் திடீரென முனைந்தார்.
இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை மட்டுமல்ல, இணையத்தையும் அதிர வைத்தது.மூத்த அரசியல்வாதி ஒருவர் இளைய தலைமுறை தலைவரின் காலில் விழுந்து வணங்க முயன்றது குறித்து பெரும் விவாதம் வெடித்த நிலையில், தேவேந்திர குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,"
இளையவர்களின் கால்களைத் தொடக்கூடாது என்று அரசியலமைப்பில் எங்கும் இல்லை” என்றார். இந்த சம்பவம், அரசியலில் மரியாதை–அதிகாரம்–வயது ஆகியவற்றை மையமாஎனது பிறந்தநாளுக்கு மஹாரியமான் மனமார பாடல் பாடி வாழ்த்தினார். அதனால் நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன். அதற்கான மரியாதை வெளிப்பாடாகத்தான் அவரது கால்களைத் தொட முயன்றேன். இது அரசியல் அல்ல; கலாசாரம்.க வைத்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
English Summary
73 year old MLA falls feet 41 year old man moment that went viral video BJP event