திருநெல்வேலியில் அதிரடி! - போக்சோ வழக்கு குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், மானூர் தெற்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் முருகன் (55), போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

இவரின் செயல்கள் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதி, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை பரிசீலித்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார், தடுப்பு நடவடிக்கை அவசியம் எனக் கருதி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று, மாவட்ட கலெக்டர் சுகுமார் பிறப்பித்த உத்தரவின் பேரில், முருகன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident Tirunelveli POCSO case accused imprisoned Palayamkottai jail


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->