மும்பை பயங்கரவாத தாக்குதல்: டேவிட் ஹெட்லிக்கு ராணா உதவியது எப்படி..? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள என்ஐஏ..!
NIA files chargesheet on how Rana helped David Headley in Mumbai terror attack
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் ஹெட்லியும் ஒருவர். இவருக்கும், லஷ்கர் அமைப்புக்கும் உதவியதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடாவை சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணாவை மத்திய அரசு கோரிக்கைப்படி அமெரிக்கா நாடு கடத்தியது. அதன்படி, டில்லி திஹார் சிறையில் தற்போது அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் பங்கு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த துணை குற்றப்பத்திரிகை மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
-8m2rh.png)
டேவிட் ஹெட்லியை ஆதரிப்பதிலும், அவர் மும்பை முழுவதும் உளவு பார்ப்பதற்கு தேவையான உதவி செய்திலும் தஹாவூர் ராணாவுக்கு முக்கிய பங்குள்ளதாகவும், அத்துடன், அவர் உளவு பார்ப்பதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மும்பையில் கார்ப்பரேட் அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு ராணாவின் பங்கு முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழில் செய்வதாக கூறி ராணா குடியேற்ற சட்ட மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அங்கு எந்த வேலை மற்றும் நடவடிக்கைகளும் இல்லை. அதனால் அவருக்கு வருமானமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஹெட்லியின் சதிச்செயலுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனம் இயங்கியுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது. மேலும் ஹெட்லி மும்பையின் முக்கியமான இடங்களுக்கு சென்று உளவு பார்ப்பதில் தேவையான உதவிகள் இந்த இருந்து கிடைத்துள்ளதாகவும் துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-8m2rh.png)
அத்துடன், இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு 2005 முதல் ராணா பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்தி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை அழிப்பதோடு, இந்திய அரசுக்கு எதிராக போர் புரிவது என்ற சதிச்செயலை அவர்கள் திட்டமிட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் நலனுக்கு எதிராகவும் இந்திய மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தும் வகையில் ராணாவின் சதிச்செயல்கள் இருந்துள்ளன என தேசிய புலனாய்வு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
NIA files chargesheet on how Rana helped David Headley in Mumbai terror attack