''பாஜ மற்றும் மோடி மீதான எதிர்ப்பை ஹிந்தி மீது திருப்புகின்றனர்: ஆங்கிலம் போலவே ஹிந்தியும் அவசியம்; ஆனால் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது''; பவன் கல்யாண்..!
Pawan Kalyan says Hindi is as necessary as English but no language should be imposed
ஆங்கிலம் போலவே ஹிந்தியும் இன்று அவசியமாகிவிட்டது. எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. அதனை கட்டாயப்படுத்தாமல், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும், தேசிய ஒற்றுமைக்கு நான் ஆதரவானவன் என்று அவர் .குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, தன்னை பொறுத்தவரையில் ஹிந்தி அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் நோக்கத்திற்காக மொழி பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் அரசியல் கட்சிகளோ, சிலரோ மொழி விவகாரத்தை ஒரு பிரச்னையாக உருவாக்குகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
-lsdjx.png)
மேலும், அவர் பள்ளியில் பயிலும் போது, ஹிந்தி 02-வது மொழி பாடம் என்றும், அதனால் ஹிந்தியை அவரால் பேசவும், எழுதவும் முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது, ஏன் இந்த ஹிந்தி விவகாரம் இவ்வளவு பெரிய பிரச்னையானது என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர், ஒடிசா, போன்ற ஹிந்தி தொடர்பு மாநிலங்களுடன் எல்லை பகிரும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கூட ஹிந்தி ஏன் இப்போது ஒரு பெரிய பிரச்னையாக மாறிவிட்டது என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தெலங்கானாவில் உருது மற்றும் தெலுங்கு கலந்து பேசப்படுகிறது. மக்கள் மருத்துவமனைக்கு பதிலாக 'தவாகானா' என்று தான் சொல்கிறார்கள். இதில் தவறு என்ன..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-pjqhe.png)
அத்துடன், தெலங்கானாவில் உள்ள சில அரசியல் தலைவர்கள், ஹிந்தியை அரசியலாக்குகின்றனர் என்றும், பாஜ மற்றும் மோடி மீதான எதிர்ப்பை ஹிந்தி மீது திருப்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அதனை அப்படித்தான் தான் பார்க்கிறேன் என்றும் ஆங்கிலம் போலவே ஹிந்தியும் இன்று அவசியமாகிவிட்டது. ஆனால் கட்டாயப்படுத்தாமல், அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். பல்மொழி அணுகுமுறை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர், சென்னையில் வளர்ந்ததால், தமிழை விரும்புகிறதாகவும், கர்நாடகா போனால் கன்னடம் பேச முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுதான் தேசிய ஒற்றுமைக்கு தேவையான அணுகுமுறை என்றும், பாரதியைப் போல, மொழி ஒருங்கிணைப்புக்கான கருவியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதுவாக இருந்தாலும் கட்டாயப்படுத்தினால் எதிர்ப்பு தோன்றும் எனவும், ஹிந்தியின் தேவையை நியாயமாக விளக்கினால் மக்கள் ஏற்க முன்வருவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Pawan Kalyan says Hindi is as necessary as English but no language should be imposed