மாசாணி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்...!
Sivakarthikeyan had darshan at the Masani Amman temple
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகன், அதர்வா, ராணா டகுபதி, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே,பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
இந்த மாசாணியம்மன் கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாசாணியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தப்பின் சிவகார்த்திகேயன் பராசக்தி படப்பிடிப்பு தலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
English Summary
Sivakarthikeyan had darshan at the Masani Amman temple