காஸ்மீரில் காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்: ஹெலிகாப்டரில் மீட்டுள்ள இந்திய ராணுவம்; குவியும் பாராட்டு..! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக ரஜோரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அங்கு வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவனை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தால் இந்திய ராணுவத்துக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிறுவன் ஆற்றின் நடுவே இருந்த பாறை ஒன்றில் சிக்கிக் கொண்ட நிலையில், நாலாபுறமும் தண்ணீர் சென்றதால் அந்த அச்சிறுவனால் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளான். இது குறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து சிறுவனை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் அங்கு நிலவும் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.


அத்துடன், கரையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மோசமான சூழ்நிலை மற்றும் பலத்த மழை பெய்த போதும், ஒருங்கிணைப்ப குழுவினர் ஹெலிகாப்டர் மூலம்  சிறுவனை மீட்டுள்ளதோடு, பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சிறுவன் தற்போது பாதுகாப்பாக மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள், உள்ளூர் மற்றும் சிவில் அதிகாரிகள் ராணுவத்தினர் மற்றும் போலீசாருக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Army rescues boy trapped in flash floods in Kashmir by helicopter


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->