ஆப்பிள் ஒன்று போதும்... முகத்தில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பளப்பளவென்று மிளிரச் செய்யும்...!
One apple is enough to make your face shiny and smooth without any oily residue
எண்ணெய் பசை குறைய:
- ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
பொலிவை பெற:
- ஆப்பிளை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.பின்பு முகத்தில் அந்த கலவையைத் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.அதன் பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.

தலையில் பிசுபிசுப்பை நீக்க:
- தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
கன்னத்தில் சதை போட:
- 3 ஆப்பிள் துண்டுகள், 3 கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.
English Summary
One apple is enough to make your face shiny and smooth without any oily residue