துணை ஜனாதிபதி தேர்தல்: நான்கு முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு: வரலாற்றில் ஒரு முறை மட்டுமே மும்முனை போட்டி..!
Only four times in the history of the Vice Presidential election have there been uncontested elections
நாட்டில் இதுவரை 16 முறை துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 04 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. இதில் 2007-ஆம் ஆண்டு மட்டுமே மும்முனை போட்டி நிலவியது.
அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி, என்டிஏ வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் 03-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அதேப்போல 1952 முதல் 1962 வரை இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இரண்டு தேர்தல்களிலும் போட்டியின்றி வெற்றி பெற்றார். 1979-ஆம் ஆண்டில், பிரபல சட்ட வல்லுநரும் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான முகமது ஹிதாயத்துல்லா துணை ஜனாதிபதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்துடன், இந்தியாவின் தலைமை நீதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் தற்காலிக ஜனாதிபதியாக பணியாற்றிய தனித்துவமான பெருமையையும் ஹிதாயத்துல்லா பெற்றுள்ளார்.
அடுத்ததாக, 1987-ஆம் ஆண்டு, அப்போதைய மஹாராஷ்டிரா ஆளுநர் சங்கர் தயாள் சர்மா, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். 1974ஆம் ஆண்டு, பி.டி.ஜாட்டி துணை ஜனாதிபதி ஆனார். அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹோரோவை தோற்கடித்து, ஜாட்டி 521 வாக்குகளைப் பெற்றார். ஹோரோ 141 வாக்குகளைப் பெற்றார்.
1984-ஆம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கடராமன் வெற்றி பெற்றார். அவர், பாபு சந்திரசென் காம்ப்ளேவை தோற்கடித்தார். அடுத்ததாக, 1987-ஆம் ஆண்டு தேர்தலில் சங்கர் தயாள் சர்மா துணை ஜனாதிபதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1992-ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில், செல்லுபடியாகும் 701 வாக்குகளில் 700 வாக்குகளை கே.ஆர். நாராயணன் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தார்த்தி பக்காத் என்று பிரபலமாக அறியப்படும் காகா ஜோகிந்தர் சிங் ஒரு வாக்கு மட்டுமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.
1997-ஆம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் கிருஷ்ண காந்த், சுர்ஜித் சிங்கை தோற்கடித்தார். அடுத்து,2002-ஆம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், காங்கிரஸ் வேட்பாளர் சுஷில்குமார் ஷிண்டேவை தோற்கடித்தார்.
2007-ஆம் ஆண்டு, துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார், மேலும் 2012-ஆம் ஆண்டு அப்போதைய யுபிஏ அரசாங்கத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டார். 2012-ஆம் ஆண்டு, அன்சாரி 490 வாக்குகளைப் பெற்று பாஜ வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை தோற்கடித்தார்.
2017-ஆம் ஆண்டு, பாஜ தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியை தோற்கடித்து துணை ஜனாதிபதியானார். அடுத்ததாக 2022-ஆம் ஆண்டு, பாஜ தலைமையிலான என்டிஏ வேட்பாளர் ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Only four times in the history of the Vice Presidential election have there been uncontested elections