குழந்தைகளுக்கு பிடித்தமான சிற்றுண்டி வகையில் மரவள்ளி கிழங்கு போண்டா... எப்படி செய்வது?
Cassava bonda is a favorite snack for children how to make it
மரவள்ளி கிழங்கு போண்டா
கிழங்கு சிற்றுண்டி
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ
தேங்காய் துருவியது – ஒரு கப்
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 6
கடலை மாவு – 25 கிராம்
மைதா மாவு – 25 கிராம்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் மரவள்ளிக்கிழங்கில் சிறிது உப்பை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு நன்றாக ஆறியதும் அதை சுத்தம் செய்து கேரட் துருவுவது போல் துருவியும் கொள்ளலாம் அல்லது நன்றாக மசித்தும் கொள்ளலாம். இப்பொழுது இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சிறிதளவு மட்டும் உப்பு சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
விருப்பம் இருப்பவர்கள் இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லிகொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.கிழங்கு சிற்றுண்டி.இவை அனைத்தையும் நன்றாக பிணைந்து உருண்டை போல் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதற்கு வெளிப்புற மாவிற்கு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள் மீதம் இருக்கக்கூடிய உப்பு, மிளகாய்த்தூள் போன்றவற்றை போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக கரைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் உருட்டி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கு உருண்டையை இந்த போண்டா மாவில் நன்றாக போட்டு ஓர் இடம் விடாமல் எல்லா இடத்திலும் தடவிக் கொள்ளுங்கள்.அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் போண்டாவை அதில் போட வேண்டும்.
ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபடியும் வேகவிட்டு எண்ணையிலிருந்து எடுத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு போட்டா தயார் ஆகிவிட்டது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு கொத்தமல்லி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
English Summary
Cassava bonda is a favorite snack for children how to make it