உல்லாசத்திற்கு இடையூறு...கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி ! - Seithipunal
Seithipunal


உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவிவிட்டு கொலைசெய்த தில்லாலங்கடி மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தபாரத் கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரை  திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு  4 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம்  விடுமுறைக்கு ஊருக்கு வந்த பாரத் பாரத் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ்  நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

 கொலை நடந்தபோது சம்பவ இடத்தில் உடனிருந்த பாரத்தின் 3 வயது இளைய மகளிடம் போலீசார் ரகசியமாக விசாரித்த போது சஞ்சய் மாமாதான் அப்பாவை வெட்டினார் என அழுதுகொண்டே சிறுமி கூறினாள். அதைத்தொடர்ந்து பாரத்தின் மனைவி நந்தினியிடம் போலீசார் தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2 ஆண்டுகளாக நந்தினிக்கு, எதிர்வீட்டில் வசிக்கும் திருமூர்த்தி என்கிற சஞ்சய் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது கணவர் பாரத்துக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  கணவன்- மனைவிக்கிடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அழுது கொண்டே தனது கள்ளக்காதலனுக்கு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சஞ்சய், பாரத்தை முடித்து விடலாம் என கூறியுள்ளார்.அதன்படி 2 பேரும் சேர்ந்து பாரத்தை தீர்த்துக்கட்டி  பாரத்தை, சஞ்சய் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

பின்னர் தலைமறைவாக இருந்த சஞ்சய்யை கைது செய்து  விசாரணை செய்தனர். அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசாரிடம் சஞ்சய் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தேங்காய் வெட்டும் கத்தியுடன் வந்து அவரிடம் தகராறு செய்தேன். இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றி அவரது மனைவி கண் முன்னே பாரத்தை சரமாரியாக வெட்டினேன்.இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பாரத் ரத்த வெள்ளத்தில் மனைவி, மகள் கண் முன்னே உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Obstacles to enjoyment the wife who killed and tied up her husband


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->