பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகும் விஜய் சேதுபதி..?அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9-வது சீசனை தற்போது தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

சண்டை, சர்ச்சை, நட்பு, காதல் என பல்வேறு உணர்வுகளை ஒருங்கே கலந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிக் பாஸ், தற்போது 9-வது சீசனுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் ஏழு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் அரசியல் மற்றும் திரைப்பட பிஸியால் விலகிய அவர் பதிலாக, 8-வது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்தார். அவரது இயல்பான பேச்சு, நேர்மையான விமர்சனங்கள், மற்றும் தனித்துவமான ஸ்டைல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால், 9-வது சீசனில் விஜய் சேதுபதியின் தொகுப்பில் ரசிகர்களிடையே கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன. அவர் போட்டியாளர்களிடம் பேசும் விதம் சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும், சில சூழல்களில் நிலைமையை சரியாக கையாள முடியவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முக்கியமாக, அவர் வெளியுலக விஷயங்களை வீட்டினுள் கூறுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உதாரணமாக, கானா வினோத் மற்றும் திவாகர் செய்த நகைச்சுவை வெளியே வைரல் ஆனது என்று அவர் சொன்ன பிறகு, அந்த ஜோடி இடையே சண்டை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக, விஜய் சேதுபதியின் அணுகுமுறையை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, தொடர்ந்து வரும் எதிர்மறை விமர்சனங்களால் மனமுடைந்த விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், இந்த சீசனே அவரது கடைசி தொகுப்பு சீசனாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில், கமல்ஹாசனை மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு அழைக்கலாமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகுமா, அல்லது அவர் ரசிகர்களின் விமர்சனங்களை மீறி தொடர்வாரா என்பது இப்போது கோலிவுட் ரசிகர்களின் முக்கிய ஆர்வமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi suddenly leaves Bigg Boss Fans are shocked


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->