விஜய்யை தொடர்ந்து ரஜினிகாந்தும் சினிமாவை விட்டு விலக முடிவு – கடைசி படத்தை இயக்கப்போவது யார்? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய நீண்டநாள் திரைப்படப் பயணத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவர் இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி, தற்போது 74 வயதிலும் முழு உற்சாகத்துடன் நடித்து வருகிறார். அவரின் பெயரே ஒரு பிராண்டாக மாறி, தயாரிப்பாளர்கள் அவரின் தேதிக்காக வரிசையில் நிற்பது வழக்கமாக உள்ளது.

ஆனால், தற்போது ரஜினி எடுத்திருக்கும் முடிவு அவரது ரசிகர்களுக்கு சோகமான செய்தியாகியுள்ளது. தகவலின்படி, வயது காரணமாக அவர் நடிப்பிலிருந்து ஓய்வெடுத்து, இனி சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

தற்போது ரஜினி நடித்துவரும் படம் ‘ஜெயிலர் 2’. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஷிவராஜ்குமார், மோகன்லால், பஹத் பாசில் போன்ற பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இப்படம் 2026 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குப் பிறகு ரஜினி, இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து ஒரு பக்கா குடும்ப பொழுதுபோக்கு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ரஜினி மற்றும் சுந்தர் சி இணையும் இது, சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கூட்டணி ஆகும். முன்னதாக இவர்கள் இணைந்த ‘அருணாச்சலம்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, ரஜினி தன்னுடைய கடைசி திரைப்படம் என கருதப்படும் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தில் கமல்ஹாசனுடன் இணைய உள்ளார். அந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மீண்டும் நெல்சன் திலீப்குமார்க்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த ரஜினிகாந்த், தனது இறுதி படத்தின் மூலம் ஒரு வரலாற்றை முடிக்கவிருக்கிறார். இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா என்பது தான் தற்போது கோலிவுட் ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Following Vijay Rajinikanth decides to quit cinema who will direct his last film


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->