சட்ட விரோத ஆன்லைன் பந்தய விளம்பரம்: பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மற்றும் ராணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத பந்தயங்களை ஊக்குவித்ததாக நடிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

குறிப்பாக சட்ட விரோதமாக பந்தயம் நடத்தும் இணையதளங்களை பிரபலங்கள் ஆதரிப்பதால், பயனர்கள் அதில் ஈர்க்கப்பட்டு பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு பணத்தை இழப்பதாக புகார் எழுகிறது.

தற்போது அவர்களை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர் ராணா டகுபதி, ஜூலை 23-ஆம் தேதியும், பிரகாஷ் ராஜ் ஜூலை 30-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆக.,06-ஆம் தேதியும் லட்சுமி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate summons Prakash Raj and Vijay Deverakonda over illegal online betting advertising


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->