வரும் ஜூலை 30-இல் விண்ணில் ஏவப்படும் நிசார் செயற்கைகோள்: இது ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் இஸ்ரோ அறிவிப்பு..!
ISRO announces launch of Nisar satellite on July 30
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயார் செய்துள்ள நிசார் செயற்கைக்கோள் வரும் ஜூலை 30-ஆம் தேதி மாலை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இது குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளதாவது:
வரும் ஜூலை 30-இல் மாலை 05.40 மணிக்கு நிசார் எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க செயற்கை கோள், நாசாவுடன் இணைந்து ஏவப்படவுள்ளது. இது இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 மூலம் நாசாவுடன் இணைந்து முதல் முறையாக இயக்கப்படுகிறது என்றும், இந்த செயற்கைகோள் ஆனது பூமியை பற்றிய கண்காணிப்புக்கு பெரிதும் பயன்படும் என்று தெரிவித்துள்ளது.
-2r6tl.png)
மேலும், 'நிசார்' செயற்கைகோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து, அதன் உயர் தெளிவுத்திறன், அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு தரவை வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அத்துடன், கடல் பனி கண்காணிப்பு, கப்பல் கண்டறிதல், புயல் கண்காணிப்பு, மண் ஈரப்பத மாற்றங்கள், மேற்பரப்பு நீர் மேப்பிங் மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல முக்கியமான பயன்பாடுகள் குறித்த பணிகளையும் 'நிசார்' செயற்கைகோள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இஸ்ரோ-நாசா இடையே 10 ஆண்டுக்கும் மேலான ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
English Summary
ISRO announces launch of Nisar satellite on July 30