கடைசி நாள் பீதியால் தளர்ந்த இணையம்! வருமானவரி தாக்கலுக்கு கூடுதல் அவகாசம்!!! – அரசு அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஜூலை 30 ஆகும். ஆனால், இந்தாண்டு ஐ.டி.ஆர். படிவங்களில் மாற்றங்கள் காரணமாக, சம்பளதாரர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு, கடைசி தேதி செப்டம்பர் 15 என நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, “கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தாக்கல் செய்யுங்கள்” என்று எச்சரித்தும், பலர் வழக்கம்போல கடைசி நாளான செப்டம்பர் 15-ம் தேதி நள்ளிரவு வரை தாக்கல் செய்தனர்.இந்நிலையில், "கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது".

இருப்பினும், போலி தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே வருமானவரித்துறை அதனைத் தெளிவுபடுத்தி, “செப்டம்பர் 15 தான் கடைசி நாள்; தேதி நீட்டிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. போலி செய்திகளை நம்ப வேண்டாம்” என எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இருந்தாலும், அதிரடியாக நேற்று இரவு மத்திய அரசு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இதன் காரணம், கடைசி நாளில் வருமான வரி இணையதளம் முடங்கியதால், இன்று (செவ்வாய் கிழமை) வரையிலும் கணக்கை தாக்கல் செய்யும் வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது.இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களின் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


சட்ட ரீதியான தண்டனைகள்:
ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தாமதித்தால் ரூ.5,000 அபராதம்.
ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதம்.
மேலும், 234ஏ பிரிவின்படி தாமதமான ஒவ்வொரு மாதத்திற்கும் நிலுவை வரிக்கு 1% வட்டி கட்ட வேண்டியிருக்கும்.டிசம்பர் 31-க்குள் அபராதத்துடன் தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளது.வரி தாக்கல் செய்ய தவறினால், ரீபண்ட் தாமதம், வரிச் சலுகைகள் இழப்பு, பங்கு சந்தை இழப்புகளை சரி செய்ய முடியாமை போன்ற சிக்கல்கள் தவிர்க்க முடியாதவையாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Extra time for filing income tax Last day panicked internet down Government orders action


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->