அரை மணிநேரம் அவரை பற்றி பேச முடியுமா? விஜய்க்கு சீமான் கேள்வி! - Seithipunal
Seithipunal


அண்ணா மீதான நன்மதிப்பு மக்களுக்கு என்றும் மாறாது. அண்ணாவை குறை சொல்ல முடியாது. அண்ணா யார்? என்று அரை மணிநேரம் விஜய்யால் பேச முடியுமா?.சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

 தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்குவதாக விஜய் அறிவித்ததில் இருந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான், அக்கட்சியின் முதல் மாநாட்டில் தமிழும், திராவிடமும் தனது கொள்கை என்று விஜய் அறிவித்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் சீமான் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநாடை சீமான் கடுமையாக விமரிசித்தர்.

இந்தநிலையில் அண்ணா பற்றி அரை மணிநேரம் பேச முடியுமா? என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பினார். 
சென்னையில் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூறியதாவது,

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து இருப்பதால் டெல்லியில் உள்ள கூட்டணி தலைவர்களை சந்திப்பார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது பற்றி கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

திருச்சியில் நடந்த சிறுநீரக திருட்டை பற்றி விஜய் பேசவில்லை. நாமக்கல்லில் நடந்த சம்பவத்தை பற்றிதான் விஜய் பேசினார். தி.மு.க.வை தோற்றுவித்தவர் அண்ணா. அ.தி.மு.க.வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்.. இவர்கள் 2 பேரையும் எடுத்து வருவதால் விஜயை எதிர்க்கிறோம் என்று சீமான் கூறினார்.

மேலும் அண்ணா  1949-ல் கட்சியை ஆரம்பித்து கஷ்டப்பட்டு 67-ல் ஆட்சியை பிடித்தார். அவரது ஆட்சியில் குறை சொல்ல எதுவும் இல்லை. ஆனால் அவர் வந்த பின்னர் தமிழர்களின் வரலாறு, இலக்கியம் எல்லாம் அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. அண்ணா மீதான நன்மதிப்பு மக்களுக்கு என்றும் மாறாது. அண்ணாவை குறை சொல்ல முடியாது. அண்ணா யார்? என்று அரை மணிநேரம் விஜய்யால் பேச முடியுமா?. 2026-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பு கிடையாது. வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன்.இவ்வாறு அவர் சீமான் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can we talk about him for half an hour? Vijay has a question for Seeman


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->