இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் தவானின் சொத்துக்கள் முடக்கம்..!
Assets of former Indian cricketers Suresh Raina and Dhawan frozen
ஆன்லைன் சூதாட்ட செயலியை அறிமுகப்படுத்தியது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
'மொபைல் போன்' புழக்கத்துக்கு பின், சூதாட்ட செயலிகள் அதிகரித்துள்ளன. இந்த செயலிகள் மூலம் மக்கள், முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதனையடுத்து, அமலாக்கத் துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
அந்த வகையில், '1 எக்ஸ் பெட்' என்ற சூதாட்ட செயலி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளமை கண்டுப் பிடிக்கப்பட்டது. இதில், பல இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்த செயலியை விளம்பரப்படுத்தியுள்ளனர். அத்துடன், அவர்கள், விளம்பரத்தின் போது, ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்றது குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, இந்த செயலியை விளம்பரப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகார் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்தனர்.
தற்போது, இந்த வழக்கில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான ரூ.11.14 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துகளும், ஷிகார் தவானின் ரூ.4.50 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Assets of former Indian cricketers Suresh Raina and Dhawan frozen